பரபரப்பான முடிவு....! எதிர்க்கட்சியின் 8 எம்பிக்கள் இடைநீக்கம் திடீர் ரத்து...!
Dramatic Turn Events Suspension 8 Opposition MPs Abruptly Revoked
நாடாளுமன்ற மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த 8 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சு.வெங்கடேசன்,எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் உள்ளிட்ட 8 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார்.

மேலும், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் இடைநீக்கம் ரத்தானது.
இதற்கு முன்னதாக, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றபோது ஏற்பட்ட அமளியில், அவைத் தலைவரின் இருக்கை அருகே சென்று காகிதங்களை வீசிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இனி அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடுவது, சபாநாயகர் மேடை மீது காகிதங்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சபாநாயகர் ஓம் பிர்லா இந்த இணக்கமான சூழலை ஏற்றுக்கொண்டதையடுத்து உறுப்பினர்கள் மீண்டும் அவையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
English Summary
Dramatic Turn Events Suspension 8 Opposition MPs Abruptly Revoked