குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்க்கு மகப்பேறு விடுப்பு கட்டாயம்...! -உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு - Seithipunal
Seithipunal


தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது எதுவாக இருந்தாலும், அத்தாய்க்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையைத் தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்ற சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 60(4)-ஐ எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குறிப்பிட்ட அந்தச் சட்டப்பிரிவு அரசியலமைப்பின் 14 மற்றும் 21 ஆகிய சரத்துகளுக்கு முரணானது எனக் கூறி அதனை ரத்து செய்தது.

மேலும், தாய்க்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பைப் போலவே, தந்தைக்கான விடுப்பையும் (Paternity Leave) ஒரு சமூகப் பாதுகாப்புச் சலுகையாக அங்கீகரிக்கும் வகையில் புதிய சட்ட விதியைக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maternity Leave Mandatory Adoptive Mothers Supreme Court Landmark Verdict


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->