கார் ரேஸில் மீண்டும் அஜித் தீவிரம்: படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார், மீண்டும் சர்வதேச கார் பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்க உள்ளார். இதுகுறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித்தின் அடுத்த ஒரு வருடத்திற்கான கார் ரேஸ் அட்டவணையை தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“அஜித்குமார் ரேசிங்” (Ajith Kumar Racing) என்ற சொந்த அணியின் மூலம் அஜித் துபாய், அபுதாபி, மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இந்த தொடர்ச்சியாக, 2026 மார்ச் 20 முதல் 2027 ஜனவரி 17 வரை பல்வேறு போட்டிகளில் அவரது அணி களம் காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்க உள்ளதால், அவரது அடுத்த திரைப்படம் குறித்த கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள சுரேஷ் சந்திரா, “அஜித் இந்த ஆண்டில் புதிய படத்தில் நடிக்கிறார். கார் ரேஸ் போட்டிகளுக்கு இடையே அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் திரை உலகிலும், ரேஸ் டிராக்கிலும் ஒரே நேரத்தில் செயல்பட தயாராக இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் அடுத்த படமாக கருதப்படும் “AK64” திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith is back in action in car racing Races even during shooting Breaking news released by Suresh Chandra


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->