நான் ஒரு நாயுடு பையன்..தெலுங்கு தெரியாது.. சாதியை குறிப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்!
I am a Naidu boy I donot know Telugu Parthiban gets into controversy again after mentioning caste!
கடந்த சில நாட்களாக நடிகர் பார்த்திபன் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது ஆந்திராவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் அவர் தனது சமூக அடையாளம் குறித்து பேசியது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 19 அன்று வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் விழாவில் பார்த்திபன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்,“என்னுடைய முழுப் பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு சரியாக தெரியாது; அதனால் தமிழ் தான் சரளமாக பேசுவேன். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் உங்களை சந்திக்கும்போது தெலுங்கில் சரளமாக பேசுவேன் என்று வாக்களிக்கிறேன். மூர்த்தி என்பது என்னுடைய ஒரிஜினல் பெயர்,” என்று கூறினார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக முற்போக்கு கருத்துகளை முன்வைக்கும் பார்த்திபன், ஆந்திராவில் ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்தை முன்வைத்து பேசியது குறித்து பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட பார்த்திபன், பொதுவாக சமூக பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிப்பவர் என்பதால், இந்த பேச்சு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
I am a Naidu boy I donot know Telugu Parthiban gets into controversy again after mentioning caste!