ஐபிஎல் 2026: கேகேஆர் அணியின் பந்துவீச்சு பலவீனம்! அதுக்கு காரணம் இதுதான் – சுரேஷ் ரெய்னா - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் 2026 தொடரானது மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த 19வது சீசன் ரசிகர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதும் கிரிக்கெட் விருந்தை அளிக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, இந்திய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் பந்துவீச்சு குறித்து கவலை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
“இந்த ஐபிஎல் சீசனில் பெரும்பாலான அணிகள் வலுவாக உள்ளன. ஆனால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பார்த்தால் சற்று கவலை ஏற்படுகிறது. ஏற்கனவே காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையை தவறவிட்ட ஹர்ஷித் ராணா, இந்த ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாமல் போயுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானாவும் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு,” என்றார்.

மேலும், “அந்த அணியில் வைபவ் அரோரா மற்றும் கார்த்திக் தியாகி போன்ற வீரர்கள் இருந்தாலும், ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அவசியம். சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் இருப்பது அணிக்கு பலம் தான். ஆனால் வேகப்பந்து வீச்சில் தான் சற்று பலவீனம் தெரிகிறது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது கேகேஆர் அணியை பார்க்க சற்று கவலையாக உள்ளது,” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

இந்த கருத்து தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. KKR அணி இந்த குறையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2026 KKR bowling is weak! This is the reason for it Suresh Raina


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->