விஜய் - சங்கீதா விவகாரம்! விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது தேவையில்லை – நடிகர் ஜான் விஜய் கருத்து - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நடிகர் விஜய் தொடர்பான பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக இருந்து வருகின்றன. குறிப்பாக, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியதாக வெளியான தகவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார் என்ற குற்றச்சாட்டு வெளியாகியதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், நடிகர் ஜான் விஜய் அளித்த பேட்டி தற்போது கவனம் பெற்றுள்ளது. அவர் கூறியதாவது:“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். ஒரு சக நடிகராக அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலுக்கு புதிதாக வருபவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்; அவர்களை தொடர்ந்து குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே தெரியும்,” என்றார்.

மேலும், ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது சரியல்ல என்றும் ஜான் விஜய் குறிப்பிட்டார்.

“ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதிப்பது தேவையற்றது. ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையை கவனித்துக் கொண்டாலே போதும். விஜய் தமிழ்நாட்டிற்காக என்ன செய்யப் போகிறார் என்பதையே பேசுவது நல்லது. அவர் தனது வீட்டில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பதை பற்றி பேசுவதற்கு நமக்கெல்லாம் எந்த உரிமையும் இல்லை. அது இங்கிதம் இல்லாத செயல்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sangeetha affair No need to talk about Vijay personal life Actor John Vijay opinion


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->