'திமுக அப்படி செய்யவேண்டிய அவசியமல்ல...ரஜினி அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்'...! - அமைச்சர் ரகுபதி அதிரடி
no need DMK that Rajini responds only affection Minister Raghupathy bold statement
"ரஜினிகாந்தை யாராலும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது. அவர் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுபவர்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் திமுகவின் நீண்டகால நண்பர் என்றும், அவரை மிரட்ட வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த புகாருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி போதைப்பொருள் விவகாரத்தில் பொய்யான புகார்களைத் தெரிவித்து வருவதாகவும், அதிமுக தற்போது ஊசலாட்டத்தில் இருப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார்.
மேலும், மார்ச் 23-க்குள் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் என்றும், வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்று ரஜினிகாந்த் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தும் இந்த அரசியல் விவாதங்களுக்கு இடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
English Summary
no need DMK that Rajini responds only affection Minister Raghupathy bold statement