முட்டையிலும் எக்ஸ்பயரி டேட்....ஏப்ரல் 1 முதல் அதிரடி அமல்...! - உத்தரப் பிரதேச அரசின் அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் விற்கப்படும் முட்டைகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதியின்படி, பழைய அல்லது கெட்டுப்போன முட்டைகளை 'புதியவை' எனக் கூறி விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த முடிவை, கால்நடை வளர்ப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் இணைந்து செயல்படுத்துகின்றனர்.

மேலும், சாதாரண வெப்பநிலையில் முட்டைகள் இரண்டு வாரங்கள் மட்டுமே கெடாமல் இருக்கும் நிலையில், பல வணிகர்கள் சரியான வெப்பநிலையைப் பராமரிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன.

புதிய விதியை மீறும் கடைக்காரர்களின் முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்றும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதற்காகத் தயாராகுமாறு உற்பத்தியாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் முட்டை விற்பனையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதும் சாத்தியமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Expiry Dates Eggs Too Strict Implementation from April 1st Bold Order from Uttar Pradesh Government


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->