''எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே'' மாணிக்கம் தாகூர்..! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னதாக ''காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. கொள்கை கூட்டணி என்றனர். இப்போது பதவிக்காக சென்றுவிட்டனர். இதில் கொள்கை எங்கு உள்ளது?'' என்று தமிழக காங்கிரசை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார். 

இதற்கு ''எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள்'' என எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; 

''கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவுக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்.

மத்தியில் பாஜகவுக்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் பழனிசாமியின் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manickam Thakur retorted Save your party first Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->