ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்து சரக்கு கப்பல்களுக்கு 20% கட்டண அறிவிப்பை வாபஸ் பெற்ற டொனால்ட் ட்ரம்ப்..! - Seithipunal
Seithipunal


ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்து இருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள உடன்பட்டுள்ளதாகச் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல்  பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

''மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகச் சிறந்த ஆலோசனைகளின் அடிப்படையில், 20 சதவீதகட்டணத்திற்குப் பதிலாக வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவிருக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மாற்றியமைக்க நான் முடிவு செய்துள்ளேன். 

இந்த முதலீடுகள் மிக பிரம்மாண்டமானதாகவும், அதே நேரத்தில் அந்த நாடுகளின் எதிர்காலத்துக்கு சாதகமான நன்மைகளைத் தருவதாகவும் அமையும். இதன் மூலம் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள் மற்றும் உபகரணங்கள் பெருகுவதை நாம் காண்போம். இது பல மில்லியன் கணக்கான உயர் ஊதியம் கொண்ட அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 

மேலும், ஈரான் துறைமுகங்களுக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் அல்லது ஈரான் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் முழுமையான முற்றுகை அமல்படுத்தப்படும். 

ஈரான் தலைமை அந்நாட்டை முழுமையான அழிவை நோக்கிய பாதையில் கொண்டு செல்கிறது. ஈரான் லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற நாட்கள் முடிந்துவிட்டன, மிக முக்கியமாக ஈரான் ஒருபோதும் அணுஆயுதம் பெற அனுமதிக்கப்பட மாட்டாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Donald Trump withdraws announcement of 20 percent tariff on all cargo ships in the Strait of Hormuz


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->