கரூர் கூட்டநெரிசல் வழக்கு; செந்தில் பாலாஜியிடம் நடந்த 06 மணி நேர சிபிஐ விசாரணை நிறைவு..! - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக  எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 06 மணி நேரம் அவரிடம் நடத்திய விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.

தவெக நிர்வாகிகள் செந்தில் பாலாஜி மீது எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கரூர் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
 
கடந்த வருடம் செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கைக்குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்ற நிலையில், .ஏற்கனவே இரண்டு கட்ட சிபிஐ விசாரணையை தவெக தலைவர் விஜய் எதிர்கொண்டுள்ளார். அதன்படி, கடந்த 15ஆம் தேதி அன்று 03-ஆம் கட்ட விசாரணைக்கு, டெல்லியில் ஆஜரானார். அவரிடமும் 06 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதில், கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் மீண்டும் சம்மன் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அடுத்த கட்ட விசாரணைக்கு சென்னை அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த வழக்கில் 17ஆம் தேதி (இன்று) ஆஜராவதற்கு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று அவர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலையே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு வந்தது, வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் செந்தில் பாலாஜி அறக்கட்டளை வாசகங்கள்  இடம்பெற்றிருந்தது உள்ளிட்டவை தொடர்பான குற்றச்சாட்டுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முன்வைத்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் காலை 11 மணி முதல் சுமார் 06 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் தவெக நிர்வாகிகள் தெரிவித்த விவகாரங்கள் தொடர்பான விளக்கங்களை செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் கேட்டதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 hour CBI interrogation of Senthil Balaji in the Karur crowd crush case concludes


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->