ஒரே நொடி தவறு...? கோவையில் பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த பால்...!
One moment carelessness Milk claims life newborn baby Coimbatore
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முரளிவேல் (கூலி தொழிலாளி) – வரதலட்சுமி (23) தம்பதியருக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் கடந்த நிலையில், அண்மையில் தான் தாய்மையின் மகிழ்ச்சி கிடைத்தது.
இந்த கர்ப்பகாலத்தில் பிரசவ வலி ஏற்பட்டதால் வரதலட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த மாதம் 20-ம் தேதி அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அங்கு பிறந்த சில நாள்களிலேயே குழந்தைக்கு வயிற்றுவலி உள்ளிட்ட சில உடல் பாதிப்புகள் ஏற்பட்டதால், திடீரென அழுத குழந்தையை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அங்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், குழந்தைக்கு பால் ஊட்டப்பட்டது.அந்த நேரத்தில் குழந்தைக்கு திடீரென இருமல் ஏற்பட்டது. சில நொடிகளில் குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லாததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பால் குடிக்கும் போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டதே இந்த துயரமான உயிரிழப்பிற்கான காரணம் என தெரியவந்தது.மேலும், பச்சிளம் குழந்தையின் திடீர் மரணம் பெற்றோர்களையும், மருத்துவமனை வளாகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
English Summary
One moment carelessness Milk claims life newborn baby Coimbatore