சூப்பர் சர்ப்ரைஸ்! கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 6 புதிய வளர்ச்சி திட்டங்கள்...! - மு.க. ஸ்டாலின்
6 new development projects Kanyakumari district MK Stalin
நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டதுடன், மொத்தம் ரூ.1,789 கோடி மதிப்பிலான பல திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.

மேலும், கன்னியாகுமரியில் ரூ.30 கோடி செலவில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார்.இந்த விழாவில் உரையாற்றிய அவர், மாவட்டத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பல புதிய திட்டங்களை அறிவித்தார்.
அதன்படி, ரூ.28.20 கோடி செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ரூ.250 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வளையாற்றில் இருந்து நகராட்சிக்கு குடிநீர் வழங்க புதிய திட்டமும் செயல்படுத்தப்படும்.அதேபோல், ஏ.வி.எம். கால்வாய் ரூ.1.20 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
முளகுமூடு தேவாலயம் ரூ.2 கோடி மதிப்பில் பழமையான வடிவத்தை காக்கும் வகையில் புதுப்பிக்கப்படும். மேலும், களியக்காவிளை – கன்னியாகுமரி சாலை ரூ.9 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
English Summary
6 new development projects Kanyakumari district MK Stalin