காலாவதி பானமா? அல்லது வேறு காரணமா? நண்பர் வீட்டில் சில நிமிடங்களில் மயக்கம்...! - 25 வயது இளைஞர் பலி
Expired drink Or another reason Fainting within minutes at friend house 25 year old youth dies
வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கிளின்டன் (25) என்ற இளைஞர், வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் தனது நண்பர் பிரசாந்தை சந்திக்க சென்னை பெரம்பூரில் உள்ள ரமணா நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரசாந்த் கொடுத்த குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களிலேயே கிளின்டன் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் பதற்றமடைந்த நண்பர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிளின்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பியம் காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், காலாவதியான குளிர்பானம் குடித்ததே மரணத்துக்கு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கிளின்டனின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்தின் உண்மையான காரணம் வெளிச்சம் பார்க்கும் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Expired drink Or another reason Fainting within minutes at friend house 25 year old youth dies