திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்தில் புதிய கட்டுப்பாடு: கையெழுத்து பதிவு... உறுதிமொழி கட்டாயம் ! – பக்தர்களுக்கு கடும் விதிமுறைகள் அமல்! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தரிசன வரிசை முறையை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடைமுறைகள் அமலுக்கு வரவிருக்கின்றன.

அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோவிலில் பின்பற்றப்படும் ஒழுங்குகளைப் போல, இங்கும் தனித்துவமான விதிமுறைச் சட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன் புதிய நடைமுறையின்படி, தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் ஸ்கேனிங் மையம் அருகிலுள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு பதிவு செய்த பின்னரே அனுமதி பெற வேண்டும்.

மேலும், இந்து மதத்தைச் சாராத மாற்று மதத்தினர் தரிசனம் செய்ய விரும்பினால், “இந்து கடவுளின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்” என உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும். அதோடு, நெற்றியில் நாமம் அல்லது பொட்டு அணிந்த பின்னரே அவர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் கோவிலில் 74,902 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 22,869 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.05 கோடி வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New restrictions Tirupati Ezhumalaiyan Temple darshan Signature registration oath mandatory Strict rules imposed devotees


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->