கடும் தீர்ப்பு! ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கொலை வழக்கில் காவலாளிக்கு ஆயுள் தண்டனை...! - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
Life imprisonment security guard case murder retired army soldier Chennai Principal Sessions Court
நடத்தை மீதான சந்தேகம் கொலையாக மாறிய வழக்கில், ஓய்வு பெற்ற ராணுவ ஊழியரை கத்தியால் வெட்டி கொன்ற தனியார் நிறுவன காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடம் தெருவை சேர்ந்த வெங்கடசாமி, ராணுவத்தில் கிளார்க் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

இவரது வீட்டுக்கு அருகில் வசித்த துளசையா (54), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.மேலும், துளசையாவின் மனைவியுடன் வெங்கடசாமி அடிக்கடி பேசியது குறித்து அவர் சந்தேகமடைந்து எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து பகையாக மாறியது.இந்த விரோதத்தின் உச்சமாக, கடந்த 2024 அக்டோபர் 11ஆம் தேதி துளசையா கத்தியால் வெங்கடசாமியை சரமாரியாக தாக்கினார்.
இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து திருவிக நகர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து துளசையாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கொலைக்குச் சம்பந்தமான நேரடி சாட்சிகள், காயங்களின் தன்மை மற்றும் சம்பவ சூழ்நிலைகள் ஆகியவை குற்றத்தை உறுதிப்படுத்துவதாக அரசு தரப்பு வாதிட்டது.
அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து துளசையாவுக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
English Summary
Life imprisonment security guard case murder retired army soldier Chennai Principal Sessions Court