Bigg Boss வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்..? - Seithipunal
Seithipunal


விஜய் டீவின் 09வது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை எட்ட இன்னும் சில நாட்களே உள்ளது. இவ்வாறு நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியதுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் கானா வினோத் தான் கோப்பையை கைப்பற்றுவார் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருகின்றனர். அத்துடன் ஒட்டுமொத்தமாக அனைவரும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். 

இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்தாலும் இன்னும் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்பதும் பெரிதும் ஏமாற்றமாக உள்ளது. இதுவரை இல்லாத அளவு தேவையில்லாத சண்டைகள், மற்றும் 18 ப்ளஸ் சார்ந்த வார்த்தைகள். போட்டியில் ஆர்வமில்லாத போட்டியாளர்கள். ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லாத கண்டன்ட் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் எல்லை மீறி இருந்தது ரசிகர்களை வெறுப்பேற்றியது. அத்துடன், இந்த வாரம் நடைபெற்ற   டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சக போட்டியாளர் சான்ட்ராவை பாருவும் கமருதீனும் சேர்ந்து காலால் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

மேலும், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மீனவ சமுதாயத்தை சேர்ந்த சுபிக்ஷா வெளியேறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேலும், கொண்டாட்ட வாரத்தில் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்துள்ள வெளியில் சென்ற போட்டியாளர்கள் உள்ளே வந்து டாப் 06 போட்டியாளர்களை தனிப்பட்ட வன்மத்துடன் தாக்குதவது போன்றவை போட்டியின் சுவார்ஸ்யத்தை  வெகுவாக குறைத்துள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. முதலில் சபரி ரூ.07 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியதாக தகவல் பரவிய நிலையில், தற்போது வின்னர் என்று எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.

டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which key contestant left the Bigg Boss house with the money box


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->