‘ஜன நாயகன்’ வெளியீட்டில் திருப்பம் கிடைக்குமா...? - கோவில் வழிபாட்டில் ஈடுபட்ட புஸ்சி ஆனந்த்...!
Will there turning point release Jana Nayagan bussy Anand engaged temple worship
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்திருந்தது.
ஆனால், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் எதிர்பாராத சிக்கல் உருவானது. இதனையடுத்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவித்தார். இதனால், சட்டப்பூர்வ தெளிவு கிடைக்கும் வரை பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
இந்த திடீர் முடிவு, பொங்கல் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், ‘ஜன நாயகன்’ எந்த தடையும் இன்றி வெளியாக வேண்டி பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.
த.வெ.க. நிர்வாகிகளுடன் இணைந்து நடைபெற்ற இந்த வழிபாட்டில், 108 சிதறு தேங்காய்களை உடைத்து வெற்றிகரமான வெளியீட்டுக்காக பிரார்த்தனை செய்தார்.சட்டப்பூர்வ தீர்ப்பும், ஆன்மிக பிரார்த்தனையும் – ‘ஜன நாயகன்’ வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
English Summary
Will there turning point release Jana Nayagan bussy Anand engaged temple worship