ஆஸ்கர் அருங்காட்சியகத்தை எட்டும் மலையாள சினிமா...! - மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ சாதனை...! - Seithipunal
Seithipunal


மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கிய ‘பிரம்மயுகம்’, கடந்த ஆண்டு வெளியானதும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுகளை குவித்த திரைப்படமாக மாறியது.

இந்த நிலையில், இந்த படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் சிறப்பு திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திகில் திரைப்படங்களை முன்னிறுத்தும் ‘Where the Forest Meets the Sea’ என்ற சிறப்பு திரையிடல் பிரிவில், ‘பிரம்மயுகம்’ இடம்பெறுகிறது.

ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் முதல் திரைப்படம் இதுவாகும்.இதே நேரத்தில், இந்த பிரிவில் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் ‘பிரம்மயுகம்’ பெற்றுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ராகுல் சதாசிவன், தனது சமூக வலைதளப் பதிவில்,“நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் ஊறிய பயங்கள், மௌனங்களின் வெளிப்பாடே ‘பிரம்மயுகம்’.

மொழி, நில எல்லைகளைத் தாண்டி இந்தப் படம் அங்கீகரிக்கப்படுவது அளவிட முடியாத மகிழ்ச்சியை தருகிறது”என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சிறப்பு திரையிடலில் ‘Midsommar’, ‘The Witch’, ‘The Wicker Man’ போன்ற உலகப் புகழ்பெற்ற திகில் திரைப்படங்களுடன் சேர்ந்து ‘பிரம்மயுகம்’ திரையிடப்படுவது, இந்திய சினிமாவுக்கான பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malayalam cinema reaches Oscar Museum Mammoottys Bramayugam achieves milestone


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->