'பராசக்தி' படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன..! ரசிகர்கள் கொண்டாட்டம்..! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயனின் 25-வது படமான பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். ரவிமோகன், அதர்வா,  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர்.

இந்நிலையில், 'பராசக்தி' படத்திற்கு U/A சான்றிதழை மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து நாளை திட்டமிட்டபடி படம் வெளியாகிறது. இதனால், 'பராசக்தி' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக டான் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பெரும்பாலான திரையரங்குகளில் 'பராசக்தி' படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் நாளை 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'பராசக்தி' படம் வெளியாகவுள்ளமை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கான தணிக்கை சான்றிதழ் குறித்த விவகாரத்தில் தணிக்கை வாரியம் மேமுறையீடு செய்துள்ளதால், படம் எப்போது வெளியாகும் என ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The advance booking tickets for the film Parasakthi have been sold out


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->