98-வது ஆஸ்கார் விருது விழா; சிறந்த திரைப்படப் பிரிவில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 05 இந்தியத் திரைப்படங்கள்..!
5 Indian films that have been included in the eligibility list for the Best Picture category at the 98th Academy Awards
2026-ஆம் ஆண்டிற்கான 98-வது ஆஸ்கார் விருதுவிழா, மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை அகாடமி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியப் படங்கள் என்ன என்ன என்று பார்க்கலாம்.
சிறந்த திரைப்படப் பிரிவில் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' மற்றும், அனுபம் கெர் இயக்கிய 'தன்வி தி கிரேட்' ஆகிய படங்கள் இப்போட்டியில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. இது முக்கியமாக தமிழில் வெளியான சசிகுமாரின் 'டூரிஸ்ட் ஃபேமிலி' சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது.
மேலும், நீரஜ் கய்வான் இயக்கிய 'ஹோம் பவுண்ட்' திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பதிவாக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது 15 படங்களைக் கொண்ட சுருக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து, 'மகாவதார் நரசிம்மா' படம் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும், ராதிகா ஆப்தே நடித்த 'சிஸ்டர் மிட்நைட்' படம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பொதுப் பிரிவுகளில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகவுள்ளது.
English Summary
5 Indian films that have been included in the eligibility list for the Best Picture category at the 98th Academy Awards