ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு.. - காங்கிரஸின் ஆசையை வெளிப்படுத்திய திருநெல்வேலி எம்.பி! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில், தமிழகத்தில் 1, 2 சதவீத வாக்கு வங்கி வைத்துள்ள கட்சிகளே முதலமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் போது, தேசிய கட்சியான காங்கிரஸுக்கும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற ஆசை இருப்பது இயல்புதான் என்று அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவரத் தொண்டர்கள் விரும்புவதாகவும், இது குறித்து அகில இந்தியத் தலைமை முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

விஜய் மற்றும் கூட்டணி குறித்து:

'ஜனநாயகன்' படத்திற்கு ஆதரவு: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைத் துறை அளிக்கும் நெருக்கடிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை: தமிழக வெற்றிக் கழகம் அல்லது அ.தி.மு.க. என எந்தவொரு மாநிலக் கட்சியை மத்திய அரசு அழிக்க நினைத்தாலும், அதற்கு எதிராகக் காங்கிரஸ் குரல் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

கட்சியில் பிளவுகள் இல்லை என்றும், மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளைப் பொதுவெளியில் தெரிவித்த இடம்தான் தவறு என்றும் அவர் விளக்கமளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Desires Share in Power Massive Protests Announced Tirunelveli MP Robert Bruce


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->