5 ஆண்டு காதல் முடிவில் கைது: மயிலாடுதுறையில் குழந்தை திருமண சம்பவம்...!
Arrest after 5 year relationship Child marriage incident Mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள பழைய திருச்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தியின் மகன் மெய்யப்பன் (25), கடந்த 5 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்த 17 வயதான கல்லூரி மாணவியை, கடந்த 6-ந் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மாணவி சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனடிப்படையில், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட மெய்யப்பனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
Arrest after 5 year relationship Child marriage incident Mayiladuthurai