பகல் நேர சாலை கொள்ளை: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு...!
Daytime street robbery woman riding scooter had her 3 sovereign gold chain snatched
புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடி திருக்குளம் தெருவை சேர்ந்த முருகன் மனைவி பூரணி (45), நேற்று மாலை தனது ஸ்கூட்டரில் குயிலாப்பாளையம் பகுதியில் இருந்து பொம்மையார்பாளையம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் உள்ள ஒரு உணவகம் (ரெஸ்டாரண்ட்) அருகே சென்ற சமயம், பின்னால் மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பூரணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, பொதுமக்கள் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
இந்த நகையின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பூரணி உடனடியாக ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, நகையை பறித்துச் சென்ற முககவசம் அணிந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Daytime street robbery woman riding scooter had her 3 sovereign gold chain snatched