குடும்ப தகராறு முடிவில் விபரீதம்...! சமையல் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்ட பெண் பொறியாளர்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் ஐ.டி. நகரமான பெங்களூருவில் குடும்பத் தகராறு உயிரிழப்பாக மாறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த சுஷ்மா (35), முன்னாள் Dell Technologies நிறுவன மென்பொருள் பொறியாளர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புனீத் குமாருடன் திருமணம் ஆன இவர், 4 வயது மகனின் தாயார்.மேலும், குடும்பத்தில் கடந்த சில மாதங்களாகவே அன்றாடச் சிறு விஷயங்களை மையமாகக் கொண்டு மோதல்கள் அதிகரித்திருந்தன.

அதிலும், குறிப்பாக, சமையல் செய்வது தொடர்பாக சுஷ்மாவுக்கும் அவரது மாமியார் கல்பனாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சமையலறையில் கூட தன்னைச் செயல்பட விடாமல் தடுத்ததோடு, அடிக்கடி மனஅழுத்தம் ஏற்படுத்தியதாகவும் சுஷ்மா தனது உறவினர்களிடம் வேதனையுடன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு மனமுடைந்த சுஷ்மா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கணவர் புனீத் குமார் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மாமியார் கல்பனாவை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family dispute ends tragedy Female engineer commits suicide over cooking problem


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->