இந்தியாவை 'நரகக்குழி' என கூறிய பதிவை share செய்த ட்ரம்ப்; வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவை நரகக்குழி என வர்ணித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் செயலுக்கு ஒன்றிய அரசு இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 அமெரிக்காவின் பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரான மைக்கேல் சாவேஜ் என்பவர், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை 'நரகக்குழி' என விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் நான்கு பக்கங்கள் கொண்ட டிரான்ஸ்கிரிப்ட் பதிவை வெளியிட்டிருந்தார். 

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் 'இந்த தரக்குறைவான கருத்தை பகிர்ந்து தற்போது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு அமெரிக்காவிலுள்ள இந்து அமெரிக்க அறக்கட்டளை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்க அதிபராக இருந்த ஒருவரே இத்தகைய இனவெறி கருத்துகளை ஆதரிப்பது, ஏற்கனவே அங்கு நிலவும் வெறுப்புணர்வை மேலும் தூண்டி இந்திய சமூகத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வமான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளதாவது;

''டிரம்ப் பகிர்ந்த இந்த கருத்துகள் போதிய தகவல்கள் இல்லாததுடன், மிகவும் பொருத்தமற்றவை மற்றும் மிக மோசமான ரசனையில் உள்ளன. பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தியா - அமெரிக்கா இடையிலான நீண்டகால உறவின் நிதர்சனத்தை இக்கருத்துகள் பிரதிபலிக்கவில்லை. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் அளித்த விளக்கத்தையும் கவனித்துள்ளோம்.'' என்று குருப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, நிலைமையை சுமூக நிலைக்கு கொண்டு வர முயன்ற அமெரிக்க தூதரகம், டிரம்ப் இந்தியாவை சிறந்த நாடாகவும், அதன் தலைவரை தனது நல்ல நண்பராகவும் கருதுகிறார் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ministry of External Affairs Strongly Condemns Trump for Sharing Post Describing India as a Hellhole


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->