இனி தமிழ் சினிமாவிலும் அனன்யா பாண்டே...! கோலிவுட் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்க ரெடியாகும் பாலிவுட் ஸ்டார்...!
Now Ananya Panday Tamil cinema too Bollywood star ready give tough Kollywood heroines
பாலிவுட் திரையுலகில் இளம் தலைமுறை நட்சத்திரங்களின் பட்டியலில் முன்னிலையில் திகழ்பவர் அனன்யா பாண்டே. நடிகர் சங்கி பாண்டேயின் மகளான இவர், 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி பதித்தார்.

அதனைத் தொடர்ந்து ‘காலி பீலி’, ‘கெஹ்ரையான்’, ‘லைகர்’, ‘சிடிஆர்எல்’ போன்ற பல படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்தி திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் பயணம் மேற்கொண்டு வரும் அனன்யா பாண்டேவை, தற்போது தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, ஒரு முன்னணி வாரிசு நடிகரின் புதிய படத்தில் அவரை இணைக்க தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இந்த படத்திற்கான கதையில் சில மாற்றங்களை நடிகை தரப்பில் முன்வைத்துள்ளதாகவும், அவை ஏற்கப்படும் நிலையில் ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில், அனன்யா பாண்டே கோலிவுட்டிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர வருகிறார் என்பது உற்சாகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Now Ananya Panday Tamil cinema too Bollywood star ready give tough Kollywood heroines