பிரச்சினையைத் தீர்க்கப் போன இடத்தில் நேர்ந்த விபரீதம்...! - கல்லூரி மாணவியை தன் வலையில் வீழ்த்திய போலிச் சாமியார்...! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ரேணுகா ஹர்ஷவர்தன் லிகிதே (25), புல்லாங்குழல் கலைஞராக அறியப்பட்டவர். இவர், புனே மாவட்டம் முல்ஷி பகுதியில் இயங்கி வரும் ஆன்மிக இசைப் பயிற்சி நிலையத்தில் முதுகலை இசைப் படிப்பை மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி தனது விடுதி அறையில் ரேணுகா தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தகவலறிந்த காவலர்கள் விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மரணத்தின் பின்னணியை ஆராய தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையின் போது வெளிவந்த தகவல்கள் பரபரப்பை அதிகரித்துள்ளன.

தனிப்பட்ட சிக்கல்களில் சிக்கியிருந்த ரேணுகா, அதற்கு தீர்வு காண சமூக வலைதளத்தின் மூலம் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அணுகியுள்ளார். ஆன்மிக வழிகாட்டியாக நடித்து வந்த அந்த நபர், “சுடுகாட்டில் மாந்திரீக பூஜை செய்தால் பிரச்சினைகள் நீங்கும்” என்று கூறி அவரை நம்பவைத்துள்ளார்.

இந்த ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ரேணுகா, கடந்த 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, அந்த நபரின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.74 ஆயிரத்தை ஆன்லைன் வழியாக அனுப்பியுள்ளார். இருப்பினும், அதற்குப் பிறகும் தொடர்ந்து பணம் கோரி தொந்தரவு செய்ததுடன், “பணம் தராவிட்டால் உனக்கும், உன் குடும்பத்தினருக்கும் தீங்கு ஏற்படும்” என்று மிரட்டியுள்ளார்.

இந்த மிரட்டல்களால் மனஅழுத்தத்தில் ஆழ்ந்த ரேணுகா, கடும் உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத அந்த போலி ஆன்மிக நபர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, அவரை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக ராஜஸ்தானுக்கு சிறப்பு குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.இந்த சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tragedy happened where he went solve problem fake preacher who lured college student into his trap


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->