French Open; 30 ஆண்டுக்குப் பின் ஜெர்மனிக்கு கிடைத்த பரிசு; முதல் 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்ற அசத்திய அலெக்சாண்டர் ஸ்வெரேவ்..! - Seithipunal
Seithipunal


பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் பிளாவியோகோபோலியை வீழ்த்தி ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜெர்மன் வீரர் என்ற சாதனையை  அலெக்சாண்டர் ஸ்வெரேவ் படைத்துள்ளார். 

இந்த போட்டியின் முதல் செட்டை ஸ்வெரேவ் எளிதாகக் கைப்பற்றிய நிலையில், பின்னர் சுதாகரித்துக்கொண்ட கோபோலி, இரண்டாவது செட்டை வென்று சமநிலை ஏற்படுத்தினார். மூன்றாவது செட்டில் கோபோலியின் தவறை பயன்படுத்திய ஸ்வெரேவ் மீண்டும் முன்னிலை பெற்றார்.

அடுத்து, நான்காவது செட்டில் கோபோலி கடுமையாகப் போராடி டைபிரேக்கர் மூலம் வெற்றி பெற்று போட்டியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டுக்கு கொண்டு சென்றார். ஆனாலும், இறுதி செட்டில் அனுபவத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தி வெற்றியை உறுதி செய்தார். பட்டம் வென்றுள்ள ஸ்வெரேவுக்கு 31 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

German player Alexander Zverev dazzles by winning his first Grand Slam title


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->