என்னால் எவ்வளவு காலம் முடியுமோ...! - ரேசிங் ஆர்வம் குறித்து மனம் திறந்த நடிகர் அஜித்...!
As long as I can Actor Ajith opens up about his passion racing
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், நடிப்புத் துறையைத் தாண்டி சர்வதேச கார் பந்தய உலகிலும் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளவர். உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள கார் பந்தயத் தொடர்களில் பங்கேற்று குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் சாதனைகளையும் குவித்துள்ளார்.
அண்மையில் வெளியான "குட் பேட் அக்லி" திரைப்படத்தைத் தொடர்ந்து, திரைப்படப் பணிகளுக்கு தற்காலிக இடைவெளி அளித்துள்ள அஜித் குமார், தற்போது முழு கவனத்தையும் கார் பந்தயப் போட்டிகளின் மீது செலுத்தி வருகிறார்.பிரான்சில் நடைபெறவுள்ள முக்கியமான சர்வதேச கார் பந்தயத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், கடந்த மே 30-ஆம் தேதி அஜித் குமாரின் தாயார் மோகினி சென்னையில் காலமானார். இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து துபாயிலிருந்து உடனடியாக சென்னை வந்த அஜித் குமார், தாயாரின் இறுதிச் சடங்குகளை குடும்பத்தினருடன் இணைந்து நிறைவேற்றினார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் தனது கார் பந்தயப் பயணம் குறித்து மனம் திறந்து பேசிய அஜித் குமார், “எனது அணி மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு வருகிறது.
அவர்களுடன் இருப்பது என் இரண்டாவது குடும்பத்துடன் வாழ்வதைப் போன்ற நெருக்கமான உணர்வை அளிக்கிறது.கடந்த மூன்று ஆண்டுகளாக துபாயை மையமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். எனது குடும்பத்தினர் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
கார் பந்தயப் போட்டிகளின் அட்டவணை காரணமாக ஆண்டின் பெரும்பாலான நாட்களை ஐரோப்பிய நாடுகளில் செலவிட வேண்டிய சூழல் உள்ளது.வரும் ஆண்டில் ஆசியன் லெ மான்ஸ் மற்றும் ஐரோப்பிய லெ மான்ஸ் தொடர்களில் பங்கேற்கும் இலக்குடன் தயாராகி வருகிறோம்.
என்னால் இயன்றவரை நீண்ட காலம் கார் பந்தய உலகில் தொடர விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் புதிய சவால்களை எதிர்கொண்டு பந்தயப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை” என தெரிவித்துள்ளார்.
English Summary
As long as I can Actor Ajith opens up about his passion racing