மேடைகளை அதிர வைக்கப் போவது யார்...? அண்ணாமலை இயக்கத்தில் 3 நாட்கள் தீவிர பயிற்சி முகாம்...!
Who rock stage 3 days intensive training camp Annamalai movement
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அண்ணாமலை, புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில் தனித்த அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளார். வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தனது இயக்கம் நேரடியாக களமிறங்கும் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அண்ணாமலையின் புதிய அரசியல் முயற்சிக்கு மக்கள் மத்தியில் கணிசமான வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை அவரது இயக்கத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அரசியல் மேடைகளில் திறமையாக கருத்துகளை எடுத்துரைக்கும் பேச்சாளர்களை உருவாக்கும் நோக்கில், தனது இயக்கம் (www.wetheleader.org) சார்பில் சிறப்பு பயிற்சி முகாமை அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாமில், பொதுக்கூட்ட பேச்சுத்திறன், அரசியல் கருத்தாக்கம், மக்கள் தொடர்பு மற்றும் தலைமைத்துவ பண்புகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வருகிற ஜூன் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இயக்கத்தின் ஆர்வலர்கள் மற்றும் புதிய தலைமுறை பேச்சாளர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Who rock stage 3 days intensive training camp Annamalai movement