மீண்டும் ஒரு மினி தேர்தல் போர்...! 5 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் தேதி...? - பரபரப்பு மிகுந்த அரசியல் களம்...! - Seithipunal
Seithipunal


2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அபார வெற்றியைப் பதிவு செய்து, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய், தேர்தல் விதிமுறைகளின்படி திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பை தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை துறந்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.

இதன் காரணமாக திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பை ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இதனால் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கிடையில், காலியாக உள்ள ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்துவதற்கான தொடக்ககட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி இந்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த மாதத்திலேயே இடைத்தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த தகவல் குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து விளக்கம் கோரி வரும் நிலையில், வருகிற 11-ஆம் தேதி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another mini election war By election date 5 constituencies next month very exciting political arena


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->