“விஜய் ஆண்டனியின் ரொமான்ஸுக்கு 100 மார்க் கொடுக்கலாம்” – நடிகை ஸ்வாசிகா ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே சசி – விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால், இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஸ்வாசிகா, விஜய் ஆண்டனியுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய் ஆண்டனி, தனது ரொமான்ஸ் குறித்து நேரடியாக ஸ்வாசிகாவிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் கூறினார்.

அதற்கு பதிலளித்த ஸ்வாசிகா,“விஜய் ஆண்டனியின் ரொமான்ஸுக்கு 100 மார்க் கொடுக்கலாம். ஆனால் அவர் ரொமான்ஸ் செய்கிறார் என்றே தெரியாது. மிகவும் இயல்பாக நடிப்பார். க்யூட்டாகவும், மென்மையாகவும் ரொமான்ஸ் செய்வார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் அப்படித்தான் அமைந்துள்ளது” என்று பாராட்டினார்.

இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராக மாறி ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றார். குறிப்பாக ‘பிச்சைக்காரன்’ அவரது திரை வாழ்க்கையின் முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது.

அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்திய படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் சசி இயக்கத்தில் நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘நூறு சாமி’ படமும் அம்மா பாசம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘பிச்சைக்காரன்’ போலவே இந்தப் படமும் ரசிகர்களின் மனதை கவரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே செய்தியாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி தனது எதிர்கால திட்டம் குறித்தும் பேசியிருந்தார்.

“இன்னும் மூன்று ஆண்டுகளில் சென்னையை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கிறேன். பொள்ளாச்சியில் குடியேற திட்டமிட்டுள்ளேன். அதற்கான இடங்களைப் பார்ப்பது உள்ளிட்ட வேலைகள் தற்போது நடந்து வருகின்றன” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I can give 100 marks to Vijay Antony romance Actress Swasika opens up


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->