நடிகர் ரவிமோகனின் மனு தள்ளுபடி...! ஜீவனாம்ச வழக்கில் நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு...! - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட குடும்ப கருத்து முரண்பாடுகள் காரணமாக, இருவரும் பிரிவதற்கான முடிவை எடுத்திருந்தனர். இதையடுத்து திருமணப் பதிவை ரத்து செய்து, விவாகரத்து வழங்குமாறு கோரி ரவி மோகன் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குறித்து பொதுவெளியில் விமர்சனங்கள், அவதூறு கருத்துகள் அல்லது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், ரவி மோகனுடன் தொடர்புடையதாக பேசப்பட்ட கெனிஷா, சமீபத்தில் அவருடனான அனைத்து தொடர்புகளையும் முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில், கடந்த மே 16-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது குடும்ப வாழ்க்கை தொடர்பாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

குறிப்பாக, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு நடிகையே காரணம் என்றும், தனது குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இந்த கருத்துகள் வெளியிடப்பட்டதாகக் கூறி, ஆர்த்தி நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து ரவி மோகன் பத்திரிகைகளில் பொது மன்னிப்பு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் நகலும் அவரது தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட எந்தவித இடைக்கால பராமரிப்பு தொகையும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி புதிய மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததால், இடைக்கால ஜீவனாம்சம் தொடர்பான மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், ஆர்த்தி தாக்கல் செய்த இடைக்கால பராமரிப்பு தொகை கோரும் மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ரவி மோகன் புதிய மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காலக்கெடு நீட்டிப்பு தேவையற்றது என்று வாதிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, தேவையான நிவாரணத்திற்காக குடும்ப நல நீதிமன்றத்தையே அணுகுமாறு அறிவுறுத்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Ravimohan petition dismissed court important decision alimony case Excitement cinema circle


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->