மின்துறையில் Hard Disk திருடு போன வழக்கு; சிபிஐ விசாரணைக்கு கோரும் அதிமுக..! - Seithipunal
Seithipunal


''மின்துறையில் நடந்தது வெறும் ஹார்டு டிஸ்க் திருட்டு மட்டுமல்ல. தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. தரவுகள் திருட்டு பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது;

''மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருடு போன வழக்கை ஏன் சிபிசிஐடி- யிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாட்கள் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது மிகவும் தாமதமாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுள்ளது.

இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?. திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் தாமதம் செய்துள்ளதன் பின்னணி என்ன?. செய்திகளில் வரும் வரை இதுபற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் தராமல் மறைத்து வைத்திருந்ததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது வெறும் ஹார்டு டிஸ்க் திருட்டு மட்டுமல்ல. தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. தரவுகள் திருட்டு பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?. நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியபடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK seeks CBI probe into the case of a hard disk stolen from the Electricity Department


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->