"சவுக்கு சங்கரை கொலை செய்ய மும்பை கூலிப்படை!" பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை - பாஜக! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முக்கிய அரசியல் விவாதக் குரலாக அறியப்படும் யூடியூபரும் விமர்சகருமான சவுக்கு சங்கர், சென்னை மாநகரக் காவல் ஆணையரை நேரில் சந்தித்துத் தனது பாதுகாப்பு குறித்துப் புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தமிழகக் காவல்துறையின் மிக உயர் பதவியில் இருக்கும் ஏ.டி.ஜி.பி அருண் ஐபிஎஸ் தனக்கு எதிராகக் கொலைச் சதியில் ஈடுபட்டுள்ளதாகப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், "என்னை ஒழித்துக்கட்ட மும்பை கூலிப்படையை ஒரு முக்கிய அதிகாரி நியமித்துள்ளார் என்பதை டெல்லி அதிகாரிகளே உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான முழு ஆதாரங்களையும் சென்னை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளேன்." என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் தெரிவித்துள்ள கருத்தில், "சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு மிக பயங்கரமானது என்பதோடு முக்கிய பொறுப்பிலுள்ள தமிழக உயரதிகாரி ஒருவர் குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முதலமைச்சர் திரு.ஜோஸப் விஜய் அவர்களின் கடமை. இந்த விசாரணை முடியும் வரை சவுக்கு சங்கர் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை மற்றும் பொறுப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku Shankar Claims Senior IPS Officer Arun Plotted His Assassination via Mumbai Gang


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->