காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு உள்ளதா..? நாடாளுமன்றத்தில் அகிலேஷ் யாதவ் ஆவேசம்..! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, தகுதி தேர்வில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பொறுப்பேற்று தான் பதவி விலக வேண்டும் என்றும் டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராகாரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது. இந்த போராட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில் வன்முறை வெடித்தது. டெல்லி போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைவீசி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்களும் லவல்துறை மீது தாக்குதல் நடத்தினர்.

இதனால் இருதரப்பிலும் பலர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.  இந்த போராட்டக்களத்தில் நடந்த தாக்குதல் விடீயோக்கள் வெளியாகி நாட்டை உலுக்கியுள்ளது. இந்தப் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள் குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, நாடாளுமன்றத்தில் மாணவர்களின் நீட் தொடர்பான போராட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் போது பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ, ''மாணவர்கள் போராட்டம் தொடர்பாக எப்படி விவாதம் நடத்துவது என்பது பற்றி அனைத்து கட்சித் தலைவர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்'' என்று குறிப்பிட்டார்.

அப்போது, சமாஜ்வாதி கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் இந்த விவகாரம் குறித்து பேச முயன்றபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரான கே.சி.வேணுகோபால் பேச நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த அகிலேஷ் யாதவ், மாணவர்கள் போராட்ட விவகாரம் காங்கிரஸ் மற்றும் பாஜக சம்மந்தப்பட்டது அல்ல என்றும், ''நீங்கள் எங்களை பேச அனுமதிக்காமல் காங்கிரஸ் கட்சியினரை மட்டுமே அனுமதிக்கிறீர்கள், இது தொடர்பாக பாஜகவுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடு ஏதும் உள்ளதா..?'' என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, அகிலேஷ் யாதவ்வுக்கு பேச அனுமதி அளித்த நிலையில், அவர் தனது கருத்தை நிறைவு செய்தார். எனினும் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள சமாஜ்வாதி தலைவர் நாடாளுமன்றத்திலேயே பாஜகவுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடு ஏதும் உள்ளதா..? என்று வெளிப்படையாக கேட்டுள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை தரவேண்டும் என சமாஜ்வாதி கட்சியிடம் வலியுறுத்தி வருகிறது. இதனால் இரு கட்சிகள் இடையே சலசலப்பு நிலவி வரும் நிலையில், அகிலேஷின் இந்த கருத்து தற்போது பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Akhilesh Yadavs anger in Parliament over whether there is an agreement between Congress and BJP


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->