17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த மருத்துவ மாணவர் கைது; நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு எதிராக மானவர்கள் போராட்டம்..! - Seithipunal
Seithipunal


திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த மாணவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகளின் புகைப்படங்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அறிந்த மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

அப்போது மொத்தம் 17 மாணவிகளின் போட்டோக்கள் ஆபாச இணையதளத்தில் வெளியானது தெரியவந்த நிலையில், இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மாணவிகள் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தியதில், அதே கல்லூரியில் 03-ஆம் ஆண்டு படித்து வரும் வயநாட்டைச் சேர்ந்த ஏபல் என்ற மாணவன்  குறித்த மாணவிகளின் போட்டோக்களை ஆபாச இணையதளத்தில் பகிர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். குறித்த மாணவன் சமூக வலைதளத்தில் இருந்து மாணவிகளின் போட்டோக்களை எடுத்து அதை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி இணையதளத்தில் பகிர்ந்தது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணைக்குப் பின் ஏபலை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதனையடுத்து, மாணவன் ஏபல் மீது போலீசார் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்று கூறி நேற்று இரவு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு மாணவியின் புகாரிலும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical student arrested for sharing photos of 17 female students on pornographic website in Thiruvananthapuram


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->