''தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்? முதல்வர் விஜய்யிடம் மு.க.ஸ்டாலின் கேள்வி..!
MK Stalin asks why he is afraid to speak out against the Karnataka government for refusing to provide water to Tamil Nadu
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் முதல்வர் விஜய் தவிக்கிறதாகவும், அவரின் அர்த்தமற்ற மௌனத்தை கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?''
தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து கால தாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது இந்த அரசு?
குறுவையும் பாதித்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில், முதல்வர், பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், முதல்வரும் பேசவில்லை. நீர்வளத் துறை அமைச்சரும் பேசவில்லை.
மேகேதாட்டு அணைக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்க நேரமில்லாமல் இருக்கிறார் முதல்வர்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக.
குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு "புதிய நிவாரணத் தொகுப்பினை” அறிவித்திடுக'' என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
MK Stalin asks why he is afraid to speak out against the Karnataka government for refusing to provide water to Tamil Nadu