'ஜனநாயகன்' படத்தை அரச அதிகாரிகளுடன் கண்டு களித்த முதலமைச்சர் விஜய்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வரும், பிரபல நடிகருமான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன், நாளை (23-ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய ஜனநாயகன், சென்சார் சான்றிதழ் உட்பட பல பிரச்சனைகளால் 06 மாதங்களுக்கு பின்பு வெளியாகவுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தனது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படத்தை சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட அரங்கில் கண்டுகளித்தார்.

முதலமைச்சர் விஜய் உடன் அரசு தலைமைச் செயலக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த சிறப்புத் திரையிடலில் படத்தை பார்த்துள்ளனர்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டு மொத்த சினமா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே 04 நாட்களுக்கான டிக்கெட் விற்கு தீர்ந்துள்ளது.

படத்தின் டைட்டிலில் 'இளைய தளபதி விஜய்', 'தளபதி விஜய்' என்று வரும் பெயர் தற்போது இந்த படத்தில் 'மாண்புமிகு முதலமைச்சர் விஜய்' என்று திரையில் தோன்றவிருக்கின்றது. 

இந்நிலையில் திருப்பூரில் உள்ள டிகே உணவு நிறுவனம் ஒன்று தான் நடத்தி வரும் மூன்று கிளைகளில் உள்ள ஊழியர்களுக்கு ஜனநாயகன் படத்தினை பார்ப்பதற்கு அரைநாள் விடுமுறை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay enjoyed watching the film Jananayagan with government officials


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->