UPI பாவனையாளர்களுக்கு குட் நியூஸ்; விரைவில் Internet இல்லாமல் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்..!
UPI payment facility to be introduced soon without internet
இந்தியாவில் விரைவில் இணைய இணைப்பு இல்லாமலேயே யு.பி.ஐ. பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்படவுள்ளது. அதாவது தொலைதூர பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோக்களில் பணம் செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்று வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கும், பல்வேறு பண பரிவர்தனைகளுக்கு பெரும்பாலும் யுபிஐ அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இதனை பயன்படுத்த இணைய இணைப்பு தேவைப்படுகிறது. இந்நிலையில், யுபிஐ பயனர்கள் இண்டர்நெட் இல்லாமலேயே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனில் அல்லது வணிகரின் PoS டெர்மினலில் இணைய இணைப்பு இல்லாமலேயே பணம் செலுத்தும் வசதியைவிரைவில் செயல்படுத்தவுள்ளதாக 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக, இணக்கமான PoS டெர்மினல்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) சான்றளிக்க தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது, ஆஃப்லைன் UPI அம்சம் NPCI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என்று தெரிகிறது.
இந்த புதியமுறை பயன்பாட்டிற்கு வந்தவுடன், பயனர்கள் தங்களின் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கப்படும் கட்டண முனையங்களில் தட்டுவதன் மூலம் ஆஃப்லைன் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்த முடியும். அதாவது, ஆரம்பத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 2,000 என ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் வரம்பிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக பயனர்களுக்கு தொலைதூர பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோக்களில் பணம் செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம், சாதனத்தில் உள்ள யு.பி.ஐ. லைட் வாலட் மூலம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பயனர்கள், இணைய இணைப்பு இல்லாமலோ அல்லது யு.பி.ஐ. PIN எண்ணை உள்ளிடாமலோ, ஆதரிக்கப்படும் ஆஃப்லைன் PoS டெர்மினல்களில் பணம் செலுத்துவதற்கு, இணையத்துடன் இணைந்திருக்கும்போது வாலட்டில் பணத்தை ஏற்ற வேண்டியிருக்கும்.
பின்னர் இந்தப் பரிவர்த்தனை யு.பி.ஐ. லைட் இருப்பைப் பயன்படுத்தும். அதாவது, இன்டர்நெட் சேவை இருக்கும்போது 'யு.பி.ஐ. லைட்' கணக்கில் முன்கூட்டியே பணத்தை சேர்க்க வேண்டும். பின், செல்போனை கடையின் பணம் பெறும் கருவிக்கு அருகே காட்டி, இன்டர்நெட் அல்லது ரகசிய எண் இல்லாமல் பணம் செலுத்தலாம் என்று கூறப்படுகிறது.
English Summary
UPI payment facility to be introduced soon without internet