டெல்லியில் பாதுகாப்புக்காக மூடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் பயணிகள் சேவைக்காக திறப்பு..!
Delhi Metro stations closed for security reasons reopen for passenger service
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (20-ஆம் தேதி) போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போது காவல்துறை தடுத்து நிறுத்தினர்.
அப்போது இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இருத்தரப்பிலும் காயம் ஏற்பட்டு பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி ஸ்தம்பித்து போயுள்ளது.
இந்நிலையில் டில்லியின் பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் பயணிகள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் கழகம் (DMRC) தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

முக்கிய மெட்ரோ நிலையங்களான மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் பயணிகள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், புளூ லைன் பாதையில் உள்ள ஜண்டேவாலான் மெட்ரோ நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேப்போன்று, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) பேரணிப் போராட்டத்தினாலும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஜாந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள 16 மெட்ரோ நிலையங்களை DMRC தற்காலிகமாக மூடியிருந்தது.
இந்நிலையில், ராஜீவ் சவுக், படேல் சவுக், ஜனபத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், ஐ.டி.ஓ, கான் மார்க்கெட் உள்ளிட்ட 16 நிலையங்கள் மூடப்பட்ட போதிலும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய நிலையங்களில் பயணிகள் ரயில்களை மாறும் (Interchange) வசதி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது.
English Summary
Delhi Metro stations closed for security reasons reopen for passenger service