காங்கோவில் வீரியமிக்க எபோலா வைரஸ் பரவல்: 999 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..! - Seithipunal
Seithipunal


கிழக்கு காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 999 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி, நிலவரப்படி, உறுதிசெய்யப்பட்ட 2,473 பாதிப்புகளில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காங்கோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், உண்மையான பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

கடந்த மே 15 அன்று எபோலா பரவல் தொடங்கிய நிலையில், முந்தைய பரவல்களை விட முற்றிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய எபோலா வைரஸ் வீரியத்திற்கு 'புண்டிக்புக்யோ' (Bundibugyo) என்ற வைரஸ் வகையே காரணம் என கூறப்படுகிறது.

இந்த வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிறப்பான சிகிச்சை முறைகளோ இதுவரை இல்லை என்றும்,  இதன் காரணமாக, வரலாற்றிலேயே எந்தவொரு எபோலா பரவலையும் விட மிக அதிவேகமாக இது மக்களைப் பலிவாங்கி வருவதாக கூறப்படுகிறது.

எபோலா என்பது ரத்தம், வாந்தி போன்ற மனிதர்களின் உடல் திரவங்கள், நோயாளிகள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலமாகப் பரவக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இதன் வீரியம் மிகவும் அதிகம் என்பதால், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகமாகவே உள்ளது.

தற்போது நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு கிழக்கு காங்கோவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இதுரி மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் செயல்படும் கிளர்ச்சியாளர்களின் வன்முறை, தடுப்பு நடவடிக்கைகளைப் பெருமளவில் முடக்கியுள்ளது. அத்துடன், வதந்திகள் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாகச் சுகாதார மையங்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் மீது 12 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை மேலும், நிலைமையை மோசமாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

999 people have died due to the deadly Ebola virus outbreak in Congo


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->