அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் கோடிக்கணக்கில் முறைகேடு..? சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்க; அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்..!
Akhilesh Yadav alleges irregularities worth crores in Ayodhya Ram Temple donations
உத்தரப்பிரதேசத்தில் பிரசித்திப்பெற்ற அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டமைக்கப்பட்டவுள்ள இக்கோயிலைக் காண நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் உள்ள பக்தர்கள் அங்கு நாள்தோறும் படையெடுத்த வருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக எழுந்துள்ள புகாரை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ராமஜென்மபூமி தீர்த்தக் ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் இக்குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார்.

அத்துடன், வழக்கமான உள்ளகத் தணிக்கை தற்பொழுது நடந்து வருவதாகவும், முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், அறக்கட்டளையின் இந்த விளக்கம் மிகவும் தெளிவற்றதாகவும், மழுப்பலாகவும் இருப்பதாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைத்து அறங்காவலர்களையும் ஒன்றிணைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் அகிலேஷ் யாதவ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Akhilesh Yadav alleges irregularities worth crores in Ayodhya Ram Temple donations