மலரும் நினைவுகள்! ராஜகுமாரனை காதலித்தது இதுதான் காரணம்! உண்மையை உடைத்து பேசிய தேவயானி! - Seithipunal
Seithipunal


90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த தேவயானி, தனது கணவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலிக்க காரணமான விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இந்த பழைய பேட்டி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித், விஜய், கமல், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த தேவயானி, ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்தார். கிளாமருக்கு முக்கியத்துவம் அளிக்காமல், நடிப்புத் திறமையால் முன்னேறிய நடிகையாகவும் அவர் பெயர் பெற்றவர்.

இயக்குநர் ராஜகுமாரனுடன் ‘நீ வருவாய் என’ படத்தின் போது தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியது. குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, தேவயானி வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், காதல் எப்படி உருவானது என்ற கேள்விக்கு பதிலளித்த தேவயானி, “உங்களை (ராஜகுமாரன்) நான் ஏன் காதலித்தேன் என்று சரியாக சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் எல்லோரிடமும் மரியாதையாக பேசுவீர்கள். அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தது. அதேபோல், உங்களுக்கு குடி, சிகரெட் போன்ற எந்த பழக்கமும் இல்லை. அந்த விஷயங்களை நான் வெறுப்பவள். அது இல்லாததும் என்னை ஈர்த்தது,” என்று தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தேவயானி குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். அதேசமயம், அவரது மகள் இனியா இசை மற்றும் சினிமா துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is the reason why she fell in love with Rajakumar Devayani broke the truth and spoke


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->