'தவெக எப்போது நாடாளுமன்ற உறுப்பினரை பெறுகிறதோ அப்போது இந்தியா கூட்டணி தொடர்பாக பேசுவோம்'; மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி..!
Manickam Thakur MP says we will talk about the India alliance when Tvk gets a member of parliament
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கூட்டணி தவெக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது பலத்தை தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் கொள்கை முடிவுகளில் மற்ற கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், வரும் இடைத்தேர்தலை பயன்படுத்தி, சட்டசபையில் 'தனிப் பெரும்பான்மை' அரசாக மாற்ற முதலமைச்சர் விஜய் தீவிரமாக வியூகம் அமைத்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, திமுகவுக்கு ஈடாக கூட்டணி பலத்தை பெருக்கும் இடத்தில் தவெக உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 04 மணிக்கு கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில் கூறியதாவது;

இந்தக் கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்புக் குழு, குறைந்தபட்ச செயல்திட்டம், இந்தக் கூட்டணிக்கு பெயர் வைப்பது உள்ளிட்டவை குறித்து விரைவில் நடைபெற இருக்கும் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். அத்துடன், யார் யாரெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளார்களோ, அவர்கள் எல்லாம் இந்தியா கூட்டணியில் உள்ளனர் என்றும், அதனால், தவெக எப்போது நாடாளுமன்ற உறுப்பினரை பெறுகிறதோ அப்போது இந்தியா கூட்டணி தொடர்பாக பேசுவோம் என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது மாநில அரசியலை பற்றி பேசுகிறோம். தவெக தலைமையிலான அரசில் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விசிக அங்கம் வகிக்கிறது என்று குறிப்பிட்டார்.
English Summary
Manickam Thakur MP says we will talk about the India alliance when Tvk gets a member of parliament