டாஸ்மாக் மூட வேண்டும்..நீ குடிக்கிறியா? மக்களை குடிகாரர்களாக்கியது போதும்- சிவகுமார் பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்களாக மாற்றுவது நிறுத்தப்பட வேண்டும். கடைசி மனிதனின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,” என வலியுறுத்தினார்.

மதுவால் சமூகத்தில் பாதிப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் குடியால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறேன்; அதற்குப் பிறகும் கேள்வி கேட்கிறீர்களா? சுமார் 40% மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது,” என்று கடுமையாகக் கூறினார். மேலும், இலவச திட்டங்கள் தேவையா என்ற கேள்விக்கு “தேவை” என சுருக்கமாக பதிலளித்தார்.

இதற்கிடையில், நடிகர் சத்யராஜ் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் யாருக்கு வாக்களிப்பேன் என்பது அனைவருக்கும் தெரியும்,” என்று நகைச்சுவையுடன் பேசினார். மேலும், விதிமுறைகளை மதித்து தனது கைபேசியை கூட கொண்டு வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வாக்குப்பதிவு நாளில் நடிகர்கள் வெளியிட்ட இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TASMAC should be closed Are you drunk Enough of making people drunk Sivakumar interview


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->