ஆசை காட்டி மோசம் செய்த காதலி...! உற்சாகமாகப் போன காதலனுக்கு நேர்ந்த அந்த கொடுமை என்ன...?
girlfriend who betrayed her lust What cruel thing that happened excited boyfriend
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் (27), பெங்களூரு ராஜாஜிநகர் பாஷியம் சர்க்கிள் பகுதியில் தங்கி, ஒரு செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய அஞ்சனாபுரா பகுதியைச் சேர்ந்த பிரேமா (27) உடன் ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.
பின்னர் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இருவரும் பிரிந்திருந்தனர்.இந்த நிலையில், தன்னுடைய வீட்டிற்கு கிரணை வரவழைத்த பிரேமா, பழைய உறவை மீண்டும் தொடங்குவதாக நம்பிக்கை ஏற்படுத்தினார். அங்கு சென்ற கிரண், எதிர்பாராத முறையில் கொடூரமான சூழ்நிலைக்குள் சிக்கினார்.

நெருக்கமான தருணத்தில், காதலை வெளிப்படுத்துவதாக கூறி, கிரணின் கை, கால்கள் மற்றும் கண்களை கட்டிப்போட்ட பிரேமா, பின்னர் மண்எண்ணெய் ஊற்றி அவரை உயிருடன் எரித்துக் கொன்றது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.முதலில் இது தற்கொலை எனக் கூறிய பிரேமா, தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, பேடரஹள்ளி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கிரணின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவரது தந்தை நரசிம்மய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.மகனின் உயிரிழப்பை கண்டு குடும்பத்தினர் துயரத்தில் மூழ்கினர்.
கிரணின் தாயார், மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்ற தகவலை கேட்டதும் மயக்கம் அடைந்து விழுந்ததாகவும், தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் நடைபெற்ற விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே காதல் உறவு இருந்ததுடன், கிரண் தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் தொடர்பில் இருந்தது பிரேமாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரியவந்தது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், “தனக்கு கிடைக்காத கிரண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்ற தீவிர எண்ணத்தில் இந்த கொடூரத் திட்டத்தை தீட்டியிருந்தார்.இதற்காக இணையதளங்களில் கொலை முறைகள் குறித்த வீடியோக்களை பார்த்ததுடன், தேவையான பொருட்களையும் ஆன்லைன் மூலம் வாங்கி வைத்திருந்தார்.
பின்னர் வேறு எண்ணில் இருந்து கிரணை தொடர்புகொண்டு விலை உயர்ந்த பரிசு வழங்குவதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார்.திட்டமிட்டபடி, கை விலங்கு, பெல்ட் உள்ளிட்ட பொருட்களால் கட்டிப்போட்டு, குளியலறையில் இருந்து கொண்டுவந்த மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அந்த கொடூர சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலைக்கு பிறகு தற்கொலை செய்ய எண்ணிய பிரேமா, விஷம் மற்றும் மாத்திரைகளையும் தயார் செய்து வைத்திருந்தார். ஆனால் தீ வேகமாக பரவியதால் அங்கிருந்து வெளியேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கைதான பிரேமாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தனது மகனை இழந்த தந்தை நரசிம்மய்யா, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
girlfriend who betrayed her lust What cruel thing that happened excited boyfriend