புறாவை பறக்கவிட்ட விஜய்க்கு கண்டனம் தெரிவித்த பீட்டா..!
PETA Condemns Vijay for Releasing a Pigeon
தமிழகத்தின் 17- வது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் மே மாதம் 04-ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கடந்த 1 மாத காலமாக பரப்புரை, ரோடு ஷோ, அரசியல் விவாதங்கள், என தமிழக அரசியல் களம் கலைக்கட்டியது. இந்த தேர்தலில் முதல் முறையாக தவெக தலைவர் விஜய் களமிறக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்த தேர்தலுக்காக பல்வேறு நகரங்களுக்குச் சென்று தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோடு ஷோவில் விஜய் ஈடுபட்ட போது, தவெக தொண்டர் ஒருவர் தவெக கட்சியின் வண்ணம் பூசப்பட்ட புறா ஒன்றை விஜய்யிடம் கொடுக்க, அந்த புறாவையும் விஜய் வாங்கிக் பறக்கவிட்டார். தற்போது அது சர்ச்சையாகியுள்ளது. தவெக வண்ணம் பூசிய புறாவை பறக்கவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் பீட்டா இந்தியா அமைப்பு தவெக விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;
'அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்த வேண்டாம். விலங்குகள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல. புறாக்கள் உணர்வுப்பூர்வமானவை, அவற்றுக்கு வண்ணம் பூசுவது, கூட்டத்தில் பறக்கவிடுவது ஆகியவை கூடாது. வண்ணம் பூசப்பட்ட புறாக்களை பராமரிக்க அதனை பீட்டா இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் பரப்புரையில் விலங்குகள், பறவைகளை பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. புறக்காளை பறக்கவிட்ட தவெகவினரின் செயல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக அமைந்துள்ளது.' எனத் தெரிவித்துள்ளது.
English Summary
PETA Condemns Vijay for Releasing a Pigeon