'தலைவர் 173' பட வில்லனாகிறாரா பிரபல இயக்குநர் சங்கர்..? - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன்பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'தலைவர் 173' படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படம், சிபி கையில் இருந்து அஷ்வத் மாரிமுத்து கைக்குப் போகும் எனச் சொல்லப்பட்டது.

;தலைவர் 173' பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில், சிபி சக்கரவர்த்தி இப்படத்திற்காக திட்டமிட்டிருக்கும் நடிகர்கள் யார் என தகவல் தற்போது பரவி வருகிறது. இப்படத்தின் நாயகியாக ஷோபனா அல்லது சிம்ரனை நடிக்க வைக்கலாம் எனவும், கூடவே படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க கமலிடம் கேட்க இருப்பதாகவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வில்லன் ரோலில் புதிதாக யாரையாவது நடிக்க வைக்கலாம் என யோசித்துள்ள சிபி, இயக்குநர் ஷங்கரை நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Renowned Director Shankar Turning Villain for Thalaivar 173


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->